தொப்பையை குறைக்கும் இந்தக் குழம்பு!

தேவையான பொருட்கள்

சுரைக்காய் - 1/4 கிலோ, காராமணி (தட்டப்பயிறு) - 50 கிராம், சின்ன வெங்காயம் - 150 கிராம், தக்காளி - 1, பூண்டு - 7-8 பற்கள், இஞ்சி - 1 துண்டு, சீரக விதைப் புளி - 1 டீஸ்பூன், கொத்தமல்லி தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், புளி, எண்ணெய்.

காராமணியை குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு நன்கு வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

சுரைக்காயின் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

புளித்தண்ணீரை சேர்த்து, புளிப்பு வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.

நறுக்கிய சுரைக்காயையும் வேகவைத்த காராமணியையும் குழம்பில் சேர்த்து, சுரைக்காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும்.

சூடான சுரைக்காய் காராமணி குழம்பை சாதத்துடன் பரிமாறலாம்.

மேலும் அறிய