கர கர மொறு மொறு வெங்காய பக்கோடா: ஈஸி டிப்ஸ்!

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 2 (நறுக்கியது), கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது), மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு.

நன்றாக கலந்து கொள்ளவும்...

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருஞ்சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

மாவை பிசையும் போது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும், பிசைந்த மாவை சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

சூடான வெங்காய பக்கோடா தயார்.

இதை சட்னி அல்லது சாஸ் வைத்து சாப்பிட்டு மகிழுங்கள்!

மேலும் அறிய