குடல் புழுவை அழிக்கும் வல்லமை... டாக்டர் சொல்லும் துவையல்!

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் - 1 கப் (நறுக்கியது), சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது), பூண்டு - 5 பல், புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - 4-5 (உங்கள் காரத்திற்கேற்ப), நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சுண்டைக்காயை போட்டு நன்கு வதக்கவும்.

சுண்டைக்காய் நன்றாக வதங்கியதும், அதை எடுத்து தனியாக வைக்கவும்.

அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு, புளியை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய சுண்டைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

சுவையான சுண்டைக்காய் துவையல் தயார்!

மேலும் அறிய