உடல் உப்பை கரைக்கும்... இந்த கூட்டு மிஸ் பண்ணாதீங்க!

தேவையான பொருட்கள்

சுரைக்காய் - 1, பாசிப்பருப்பு - 1/2 கப், தண்ணீர் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், காய்ந்த சிகப்பு மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, துருவிய தேங்காய் - 3/4 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், வரமிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன்.

முதலில் சுரைக்காயை நன்றாக அலசி அதன் தோலை சீவி கொள்ளுங்கள்.

பின்னர் அதை ஓரளவுக்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். பிறகு அதனுடன் அலசிய பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி அடுப்பில் வைத்து 20 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

மிக்ஸி ஜாரில்..

இதற்கிடையே மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், அரிசி மாவு, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் ஆகியவற்றை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுது போல் மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

கொதிக்க விடவும்

பின்னர் இதை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் சுரைக்காயுடன் சேர்த்து கலந்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

கடாய் ஒன்றை வைத்து...

தற்போது மற்றொரு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டுக்கொள்ளுங்கள்.

கடுகு வெடித்ததும் சிறிதளவு காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பின்னர் அந்த தாளிப்பை சுரைக்காயில் போட்டு கலந்து இறக்கினால் சுவையான சுரைக்காய் கூட்டு ரெடி.

மேலும் அறிய