தேங்காய் இல்லையா? டேஸ்டி சட்னிக்கு சிம்பிள் டிப்ஸ்!

Author - Mona Pachake

தேங்காய் இல்லாமல் தேங்காய் சட்னி செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன.

அதில் தேங்காய் இல்லை என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது.

அதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1/2 கப் பொட்டுக்கடலை 2-3 பச்சை மிளகாய் சிறிதளவு புளி 1/2 இன்ச் இஞ்சி உப்பு தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, இஞ்சி, தேங்காய் (தேவையானால்), உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சட்னி பதத்திற்கு கொண்டு வரவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, சட்னியில் ஊற்றவும்.

இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

மேலும் அறிய