சாதம் - 2 கப், பால் - 1/2 கப், தயிர் - 2 கப், மாதுளை முத்துக்கள் - 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
கடுகு - 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன், சீரகம் - 1/2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - 1, இஞ்சி (பொடியாக நறுக்கியது) - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
வெந்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் பால், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கரையும் வரை கலந்து விடவும்.
ஒரு சிறிய கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
தாளிப்பை தயிர் சாதத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக மாதுளை முத்துக்கள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லித் தழையை சேர்த்து, நன்கு கலந்து விடவும்.
இந்த எளிய முறையில் செய்யப்படும் கோயில் ஸ்டைல் தயிர் சாதம், பல கோயில்களில் பிரசாதமாகப் பரிமாறப்படும் அதே சுவையுடன் இருக்கும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்