கோவில் ஸ்டைலில் வெண் பொங்கல்... ஈஸி டிப்ஸ்!

Author - Mona Pachake

தேவையான பொருட்கள்

பச்சை பருப்பு – 1/2 கப், பச்சரிசி – 1 கப், தண்ணீர் – 2½ கப், உப்பு – தேவையான அளவு, மிளகு – 1 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது), பெருங்காயம் – சிறிது, கடுகு – ½ டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6–8 (விருப்பத்திற்கேற்ப), கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

ஒரு வாணலியில் பச்சை பருப்பை லேசாக வாசனை வரும் வரை வதக்கவும்.

பின் அரிசி சேர்த்து, இரண்டு கப் நீர் விட்டு கழுவவும்.

குக்கரில் அரிசி, பருப்பு, தண்ணீர், உப்புடன் சேர்த்து 4 விசில் வரை வெந்தவுடன் தீயை அணைக்கவும்.

நெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்

வேறு வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, கடுகு, முந்திரி, மிளகு, ஜீரகம், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை அனைத்தையும் தாளிக்கவும்.

தாளித்ததை வெந்த அரிசி பருப்பு கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்

கொஞ்ச நேரம் கிழிக்கவிட்டு பரிமாறவும்.

அவ்வளவு தான்... கோவில் ஸ்டைல் வெண் பொங்கல் வீட்டிலேயே தயார்!

மேலும் அறிய