எல்லா டிபனுக்கு பெஸ்ட்... தக்காளி சால்னா!

Author - Mona Pachake

தக்காளி சால்னாவை உங்கள் வீட்டில்....

வழக்கமான சாம்பார் சட்னியை தூக்கி போட்டு விட்டு இந்த தக்காளி சால்னாவை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இது எல்லா டிபனுக்கும் பேஸ்ட்டான சைடு டிஷ் தான்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 தேக்கரண்டி, பட்டை - 1 துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 2, சோம்பு - 1/2 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் - 1, நறுக்கிய தக்காளி - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, அரைத்த தேங்காய் பேஸ்ட் - 1/4 கப், தண்ணீர் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி தழை - சிறிதளவு.

முதலில், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு போட்டு தாளிக்கவும்.

அடுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

அடுத்து, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு, அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும், கொத்தமல்லி தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் அறிய