நம்ம ஊரு ஸ்டைல் கட்டுச் சோறு: லஞ்ச் பாக்சில் குடுத்துப் பாருங்க!

தேவையான பொருட்கள்

சாதம் - 2 கப் (வேக வைத்தது), புளி கரைசல் - 1 கப், தேங்காய் பால் - 1 கப், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கடலை பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி இலை - சிறிதளவு (அலங்கரிக்க).

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, புளி கரைசலை சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

கரைசல் கொதித்ததும், தேங்காய் பால் சேர்த்து கிளறி, பச்சை வாசனை போனதும் சாதத்தை சேர்த்து கிளறவும்.

சாதம் மற்றும் மசாலா அனைத்தும் ஒன்றாக கலந்ததும், கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

அவ்வளவு தான்... தேங்காய் பால் புலி சாதம் தயார்!

மேலும் அறிய