மீன் சேமியா... வேலூர் பக்கம் ரொம்ப பேமஸ்; சிம்பிள் டிப்ஸ்!

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய், மீன், இடியாப்பம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, எண்ணெய், மிளகு தூள், சோள மாவு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி.

முதலில் 10 காய்ந்த மிளகாய், 10 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சியை 150 மில்லி லிட்டர் சுடு தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.

அதன் பிறகு மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.

இதில் பாதி எலுமிச்சையின் சாறு சேருங்கள். கூட ஒரு டீஸ்பூன் உப்பு போடுங்கள்.

அடுத்ததாக 2 ஸ்பூன் சோளமாவு இரண்டு ஸ்பூன் சேருங்கள். இவற்றை மீன் துண்டுகளில் தடவி வைக்கவும்.

பேனில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை இருபுறமும் தலா மூன்று நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.

அதே பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் ஒன்றை பொடிதாக வெட்டி போடவும். இதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை சேருங்கள்.

சிறிது நேரம் கழித்து 2 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்தால் சீக்கிரமாக வதங்கிவிடும்.

அடுத்ததாக ஒரு பெரிய தக்காளி போட்டு மீதம் இருக்கும் பேஸ்ட்டை சேர்க்கவும்.

பச்சை வாடை போன பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றுங்கள். இரண்டு இடியாப்பத்தை போட்டு கொத்து பரோட்டா செய்வது போல் கொத்தவும்.

இதோடு ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் மிளகு தூள் போடுங்கள்.

சிறிது நேரத்தில் சுவையான வேலூர் மீன் சேமியா ரெடி.

மேலும் அறிய