வெண்டை, தயிர் சேர்த்து... தடதடன்னு கிரேவி!

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய்: 200 கிராம் (நறுக்கியது), புளி: எலுமிச்சை அளவு, தயிர்: 1 கப், சின்ன வெங்காயம்: 10-12 (நறுக்கியது), பூண்டு: 5-6 பல் (நறுக்கியது), தக்காளி: 1 (நறுக்கியது), கறிவேப்பிலை: சிறிது, கடுகு, வெந்தயம், எண்ணெய்: தாளிக்க, மிளகாய் தூள்: 1-2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப), தனியா தூள்: 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள்: 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள்: 1/4 தேக்கரண்டி, உப்பு: தேவையான அளவு.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர் தயிரை சேர்த்து கிளறவும்.

வதக்கிய வெண்டைக்காயை குழம்பில் சேர்த்து, 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

சுவையான வெண்டைக்காய் தயிர் கார குழம்பு தயார்.

மேலும் அறிய