நட்சத்திர ஓட்டலில் பேவரைட் ரெசிபி: நீங்களும் செஞ்சு அசத்துங்க!

தேவையான பொருட்கள்

வெற்றிலைகள் - 5-6 இளநீர் - 1 கப் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை - சுவைக்கு ஏற்ப சீரகம் - ¼ டீஸ்பூன் (விரும்பினால்) சிறிது எலுமிச்சை சாறு (விரும்பினால்) இஞ்சி - கரத்திற்கேற்ப

Photo Credit : YouTube/ @Pasumai Thottakalai

வெற்றிலைகளை நன்கு கழுவி, அவற்றின் நரம்புகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய வெற்றிலை துண்டுகளுடன், இளநீர், சீரகம் (சேர்ப்பதாக இருந்தால்) சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

Photo Credit : Freepik

அரைத்த கலவையை ஒரு மெல்லிய துணியில் அல்லது வடிகட்டியில் போட்டு, சாற்றை தனியாகப் பிரித்தெடுக்கவும்.

கிரைப்பதற்கு முன் தேவைப்பட்டால் உங்கள் காரத்திற்கேற்ப கொஞ்சம் இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம்.

வடிகட்டிய இளநீர்-வெற்றிலை சாற்றுடன், தேவையான அளவு தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

புத்துணர்ச்சியூட்டும் வெற்றிலை பானத்தை உடனடியாகப் பரிமாறலாம்.

5 ஸ்டார் ஹோட்டல்களில் இதை வெல்கம் ட்ரிங்க்காக கொடுக்கிறார்கள்

இதை 'வெற்றிலை வசந்த நீர்' அல்லது 'வெற்றிலை பானம்' என்று கூறலாம்.

மேலும் அறிய