விஜய் சேதுபதி விரும்பும் ரெசிபி... நெய் சேர்த்து இப்படி சாப்பிடுங்க!

இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தான் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்த டிஷ் ஆம். அதை படி செய்வது என்று சிம்பிளாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், வெந்தயம், கடுகு, எண்ணெய், உப்பு மற்றும் கருவேப்பிலை.

கத்திரிக்காயை காம்புடன் வெட்டி, நான்காக கீறிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வதக்கவும்

நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கத்திரிக்காயை போட்டு, குழம்பு திக்காக வரும் வரை வேக விடவும்.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்... சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மேலும் அறிய