எடை குறைய பெஸ்ட் ரெசிபி!

தேவையான பொருட்கள்:

சமைத்த கருப்பு கொண்டைக்கடலை - 1 கப், சமைத்த சாதம் - 2 கப், பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 (கீறியது), மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், சீரகத் தூள் - ½ டீஸ்பூன், கரம் மசாலா - ½ டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து - ½ டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது), உப்பு - தேவைக்கேற்ப.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

வேகவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சேர்த்து, மசாலாவில் நன்கு கலக்கவும்.

கடைசியாக, வேகவைத்த சாதத்தைச் சேர்த்து மசாலாவுடன் நன்கு கிளறவும்.

நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, சூடாக பரிமாறவும்.

மேலும் அறிய