பழம்பெரும் இயக்குனரும், நடிகருமான மனோபாலா காலமானார்

May 03, 2023

Mona Pachake

பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு புதன்கிழமை காலமானார்.

சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.

அவரது வலுவான நகைச்சுவை பாத்திரங்களுக்கு பெயர் பெற்ற மனோபாலா, தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் தொடர்ந்து பணியாற்றியவர்

1979 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில், உதவி இயக்குநராக பாரதிராஜாவுடன் தனது வேலையை தொடங்கினார்.

1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆகாய கங்கை' திரைப்படம் தன் இவர் முதன் முதலில் இயக்கியது.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோபாலா, இயக்குனராக 24 படங்களையும் இயக்கியுள்ளார்

மனோபாலா கடைசியாக 'கோஸ்டி' மற்றும் 'கொன்றால் பாவம்' படங்களில் நடித்தார்.