கரைந்து போன கோபம்... இந்த பாட்டு கேட்டு கண்ணீர் விட்ட சிவாஜி! -

பெரிய மோதல்

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவியரசர் கண்ணதாசன் இருவருக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டு, பிரிந்த நிலையில், இவர்கள் இருவரையும் ஒரு பாடல் ஒன்று சேர்த்து வைத்துள்ளது.

சிவாஜிக்கு கோபம்...

தி.மு.கவில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வந்தபோது, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது, அப்போது கண்ணதாசன் தெனாலி ராமன் படத்தில் தெனாளி ராமன் குழியில் இருப்பது போன்று சிவாஜி கணேசன் ஒரு குழியில், படத்தை போட்டு இது தான் சிவாஜியின் எதிர்காலம் என்று கண்ணதாசர் எழுதிவிடுகிறார். அதை பார்த்தவுடன்தான் சிவாஜிக்கு கோபம் வந்துவிடுகிறது.

ஏய் என்னடா நடக்குது...

ஒரு நாள் வாகினி ஸ்டுடியோல சிவாஜி நடித்து கொண்டிருக்கிறார். கண்ணதாசன் வந்திருக்கார் என்று சொன்னவுடன் டேய் கண்ணதாசா நில். என்று சிவாஜி கணேசன் அவரை தாக்க துரத்துகிறார், கண்ணதாசன் பக்கத்து ஸ்டுடியோக்கு போய்விடுகிறார். அவரை துரத்து உள்ளே சென்ற சிவாஜியை அங்கிருந்த என்.எஸ்.கிருஷ்ணன் தடுத்து, ஏய் என்னடா நடக்குது என்னடா நடக்குது என்று சிவாஜி விஷயத்தை அவரிடம் சொல்லி இருக்கிறார்,

சினிமா உலகம் என்பது வேறு

இதை கேட்ட என்.எஸ்.கிருஷ்ணன், ஏதோ சொல்லிருக்கார். சரி விடு அவன் எழுதினால் அப்படி நடந்துவிட போவது இல்லை. நீ போ. என்று சொல்லி சிவாஜி சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு கண்ணதாசரை சத்தம் போட்டிருக்கார். நீ அரசியலிலும் இருக்கிறாய் சினிமாவிலும் இருக்கிறாய். ஆனால் அது வெளியே காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இங்கே இல்லை. சினிமா உலகம் என்று வேறு. நீ எதற்கு சிவாஜி பகித்துக்கொள்ளுகிறாய் என்று அவர் கண்ணதாசனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டார்.

சிவாஜியின் அனுமதி இல்லாமலே....

பகப்பிரிவினை பிறகு சிவாஜி படங்களில் கண்ணதாசனை அழைக்கவில்லை என்றாலும், அவர் எழுத வேண்டாம் எனவும் சொல்லவில்லை. பட்டுக்கோட்டை காலமானதால், அடுத்த எழுத்தாளராக கண்ணதாசன் வந்தார். பாசமலர் படம் தயாரிக்கப்படும் போது, சிவாஜியின் அனுமதி இல்லாமலே கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியார். பாடல்கள் பதிவாகி பின்னர் சிவாஜியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டன.

மலர்ந்தும் மலராத பாதி மலர்...

பாசமலர் படத்தின் "மலர்ந்தும் மலராத பாதி மலர்" பாடலை முதன்முறையாக கேட்ட சிவாஜி, அதன் பாடலால் ஆழமாக பாதிக்கப்படுகிறார். கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது. உடனே "கண்ணதாசனுக்கு போன் செய்யுங்கள், அவரை உடனே பார்க்கணும்" என்று கூறுகிறார். இதைக் கேட்ட கண்ணதாசன் உடனே அவரது வீட்டுக்கு வருகிறார்.

இரு இமயங்களும் இணைந்ததாகும்

கண்ணதாசன் சிவாஜி வீட்டுக்கு வந்தவுடன், சிவாஜி ஓடி வந்து அவரை கட்டிப்பிடித்து "நீ சரஸ்வதி, நீ தான் கவிஞன்" என புகழ்ந்து, இனி அனைத்து படங்களுக்கும் அவர் தான் பாடல் எழுத வேண்டும் என கூறுகிறார். இருவரும் கதறி அழும் அந்த தருணத்தில், இரு இமயங்களும் இணைந்ததாகும்.

மேலும் அறிய