மற்றொரு அதிரடி படத்தில் அஜித்

அஜீத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படத்திற்கு ஏகே61 என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோ படத்தின் செட்டில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இயக்குனர் எச் வினோத் ஆகியோரின் புகைப்படத்தை வெளியிட்டது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

அஜித், போனி, வினோத் ஆகியோர் இதற்கு முன் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்தனர். நேர்கொண்ட பார்வை

ஏகே61 படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்