அர்னவ் விஜய்யின் 'ஓ மை டாக்'

அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய்யின் முதல் படமான ‘ஓ மை டாக்’ ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படுகிறது.

பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இடையேயான 4 பட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இப்படம் உள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்

சரோவ் சண்முகம் இயக்கி, எழுதியுள்ள இந்தப் படத்தில் விஜய் குமார், அருண் விஜய், அர்னவ் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்

இது தாத்தா, தந்தை மற்றும் மகன் போன்ற திரைக்கு வெளியே உள்ள உறவை மீண்டும் திரையில் பிரதிபலிக்கிறது

‘ஓ மை டாக்’ ஒரு குழந்தை பார்வையற்ற நாயுடன் பகிர்ந்து கொள்ளும் பிணைப்பைச் சுற்றி வருகிறது.

நிவாஸ் பிரசன்னா இந்தப் படத்தின் இசையமைப்பாளர்

‘ஓ மை டாக்’ தவிர, அருண் விஜய் நடித்த ‘யானை’ மே 6 அன்று திரைக்கு வருகிறது.