அதர்வாவின் ட்ரிகர் டீசர் வெளியாகியுள்ளது

அதர்வா முரளி நடிப்பில் உருவாகி வரும் ட்ரிக்கர் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

20 குழந்தைகளின் கடத்தல் மற்றும் குற்றத்தை காவல்துறை எவ்வாறு கண்காணிக்க முயற்சிக்கிறது என்பதை மையமாகக் கொண்டுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இப்படத்தை இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்

இப்படத்தில் தன்யா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன் முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, சின்னி ஜெயந்த், அன்புதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

ஜிப்ரான் படத்தின் இசையமைப்பாளர்