'பாபா' மறு வெளியீடு: ரஜினிகாந்த் புதிய வரிகளை டப் செய்கிறார்
Nov 30, 2022
Mona Pachake
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக எடிட் செய்யப்பட்ட பதிப்பில் புதிய காட்சிகளுக்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசியதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசையையும் மேம்படுத்த வேண்டுமா என்பதைச் சரிபார்க்க முன்னோட்டத்தைக் கோரியுள்ளார்.
பாபா படத்தை ரஜினிகாந்த் தனது லோட்டஸ் இன்டர்நேஷனல் பேனரில் தயாரித்தார்
மனிஷா கொய்ராலா, டெல்லி கணேஷ், கவுண்டமணி, சுஜாதா, எம்.என்.நம்பியார், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.