ராகவா லாரன்ஸ் தான் இப்போது புதிய வேட்டையன்...!

Jul 31, 2023

Mona Pachake

‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பாளர்கள் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

கம்பீரமான உடையில் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி அரண்மனையின் பெரிய படிக்கட்டில் இறங்குவதைக் காணலாம்.

திகில் படமாக உருவாகி வரும் இப்படம் விநாயக சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'சந்திரமுகி' (2005) படத்தை இயக்கிய பி வாசு, அதன் தொடர்ச்சியையும் இயக்கியுள்ளார்

கதாநாயகியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்

இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ரவி மரியா மற்றும் ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.