கோப்ரா மூன்றாவது சிங்கிள் அப்டேட் இங்கே

கோப்ரா படத்தின் அடுத்த பாடல் குறித்த அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

தும்பி துள்ளல், அதீரா பாடல்களைத் தொடர்ந்து, அடுத்த பாடல் பெயர் மற்றும் எப்போது வெளிவரும் என்பது பற்றிய அறிவிப்பை கோப்ரா படக்குழு வெளியிட்டுள்ளது.

"உயிர் உருகுதே" என தொடங்கும் பாடல், ஜூலை 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில், நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்

இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்