'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது
Mar 09, 2023
Mona Pachake
'பொன்னியின் செல்வன் 2' ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரவிருக்கும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை அறிவித்தனர்.
இந்தப் படத்தின் இயக்குநர் மணிரத்னம்
படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மணிரத்னம், இளங்கோ குமரவேல் மற்றும் பி ஜெயமோகன் ஆகியோர் இனைந்து எழுதுகிறார்கள்
இந்த படம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனர்களின் கீழ் தயாரிக்கப்படுகிறது
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.