ஹன்சிகா மோத்வானியும் சோஹேல் கதுரியாவும் திருமணம் செய்து கொண்டனர்

Dec 09, 2022

Mona Pachake

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கும் அவரது நீண்ட நாள் காதலரான தொழிலதிபரும் சோஹேல் கதுரியாவுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்காக ஜெய்ப்பூருக்குச் செல்வதற்கு முன், ஹன்சிகா தனது தோழிகளுடன் பேச்லரேட் பார்ட்டிக்காக கிரீஸ் சென்றிருந்தார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராமில் நிறைய புகைபடங்களை பகிர்ந்துள்ளார்

முன்னதாக நவம்பரில், சோஹேல் கதுரியாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக ஹன்சிகா அறிவித்தார்.

ஹன்சிகா கடைசியாக யுஆர் ஜமீலின் ‘மஹா’ படத்தில் நடித்தார், இது அவரது 50வது படமாகும்.

ஆதியின் 'பார்ட்னர்' மற்றும் 'மை நேம் ஐஸ் ஸ்ருதி' தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளது