ஆங்கில படத்துக்காக சர்வதேச விருது…

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜா விருதை வென்றார்.

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருதை வென்றுள்ளார்.

இயக்குனர் அஜித்வாசன் உக்கினாவின் இந்தோ-ஆங்கில திரைப்படமான எ பியூட்டிஃபுல் பிரேக்கப்பில் இசையமைத்ததற்காக இளையராஜா விருதை வென்றுள்ளார்.

இந்தத் தகவலை தயாரிப்பாளர் சர் மார்கோ ராபின்சன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தில் இளையராஜாவின் 30 அசல் பாடல்கள் உள்ளன

இது இளையராஜாவின் 1422வது படம்