'கிரிமினல்' படம் - படப்பிடிப்பு முடிந்தது

Mar 18, 2023

Mona Pachake

நடிகர்கள் கௌதம் கார்த்திக் மற்றும் ஆர் சரத்குமார் இணைந்து நடிக்கும் படம் ‘கிரிமினல்’.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் தட்சிணா மூர்த்தி ராமா எழுதி இயக்கியுள்ளார்

இது பர்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் கீழ் பி.ஆர் மீனாட்சி சுந்தரம் மற்றும் ஐ.பி கார்த்திகேயன் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்

இதற்கிடையில், கவுதம் கார்த்திக் அடுத்ததாக சிலம்பரசனுடன் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார்.

இப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது