சிலம்பரசன் நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ - படப்பிடிப்பு முடிந்தது.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது

இந்த செய்தியை திரைப்பட தயாரிப்பாளர் தனது சமூக வலைதளங்களில் சிம்பு ஒருவரை நோக்கி துப்பாக்கியை வைத்திருப்பது போன்ற போஸ்டருடன் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது

‘வெந்து தணிந்தது காடு’ மும்பையில் தெருக் குண்டர்களின் கதையைச் சொல்கிறது

பி ஜெயமோகன் திரைக்கதை அமைத்துள்ளார், இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது.

சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.