ரெக்கார்டிங் வீடியோவை 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்
Mar 27, 2023
Mona Pachake
‘பொன்னியின் செல்வனின்’ இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படம் குறித்த தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் காட்சிகள் அடங்கிய துணுக்கு வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படத்தில் 7 பாடல்கள் இருக்கும் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது
'பொன்னியின் செல்வன்' படத்தை ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
'பொன்னியின் செல்வன் 2' ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.