தமிழில் ‘தோனி என்டர்டெயின்மென்ட்’...
Oct 27, 2022
Mona Pachake
எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு பேனர் தமிழ் சினிமாவில் களமிறங்குகிறது
இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் ‘தோனி என்டர்டெயின்மென்ட் ‘என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினர் என்பது ஏற்கனவே தெரிந்ததே.
இந்த பேனர் விரைவில் தங்களின் முதல் தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளது என்பது புதிய தகவல்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது
தமிழ் மட்டுமின்றி, தோனியின் தயாரிப்பு பேனர் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுடன் அனைத்து வகைகளிலும் உள்ளடக்கத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.