தாய்லாந்தில் கோலாகலமாக நடந்த வரலட்சுமி – நிக்கோலஸ் திருமணம்; அழகிய புகைப்படங்கள்
Author - Mona Pachake
தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவான சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் வரலட்சுமியின் நடிப்பு ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது
இதனிடையே மும்பையைச் சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை 14 ஆண்டுகளாக காதலித்து வந்த வரலட்சுமி, சில மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்.
அதையடுத்து மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் தாய்லாந்தில் வரலட்சுமியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.