‘பாயும் ஒலி நீ எனக்கு’: டீசர் வெளியாகியுள்ளது

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் தமிழ் திரைப்படம் பாயும் ஒலி நீ எனக்கு படத்தின் டீசரை கார்த்தி, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இப்படத்தை கார்த்திக் அத்வைத் எழுதி இயக்கியுள்ளார்.

படத்தையும் அவரே தயாரிக்கிறார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க சென்னையில் நேரலையில் படமாக்கப்பட்டது

விக்ரம் பிரபு தவிர, பாயும் ஒலி நீ எனக்கு படத்தில் தனஞ்சயா, வாணி போஜன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது

இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறும்.