'இந்தியன் 2' படத்தின் சென்னை ஷூட்டிங் முடிந்தது

Jun 01, 2023

Mona Pachake

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் படத்தின் சென்னை ஷூட்டிங் ஐ  திட்டமிட்டதற்கு முன்பே முடித்துள்ளனர்.

அடுத்த ஷூட்டிங் க்கு டீம் லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் செல்லும் என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசன் டைட்டில் ரோலில் நடிக்கும் இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

இப்படத்தில் கமல் தவிர பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் 'இந்தியன் 1' முடிவடைந்த விதத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மற்றும் மீண்டும் ஒருமுறை கடும் சமூக செய்திகளை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.