'ஜென்டில்மேன் 2' - கதாநாயகன் பெயர் வெளியானது

Oct 07, 2022

Mona Pachake

தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தனது 1993 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் படமான ‘ஜென்டில்மேன்’ படத்தின் தொடர்ச்சியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் பிரதானமாக பணியாற்றி வரும் சேத்தன் சீனு இப்படத்தின் நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

‘பெல்லிகி முண்டு பிரேம கதா’, ‘வித்யார்த்தி’ மற்றும் ‘மந்த்ரா 2 ‘போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

முதல் படத்தை ஷங்கர் இயக்கியிருந்தாலும், அதன் தொடர்ச்சியை ‘ஆஹா கல்யாணம்’ போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைக்கவுள்ளார்

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் வெளியீட்டுத் திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.