ஆர்.ஜே.பாலாஜியின் ‘படாய் ஹோ’ ரீமேக் - ‘வீட்ல விஷேசம்’

ஆர்.ஜே.பாலாஜியின் ‘படாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘வீட்ல விஷேஷம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது

என்.ஜே.சரவணனுடன் இணைந்து பாலாஜியும் இயக்கியுள்ளார்

இருவரும் இதற்கு முன்பு நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கியிருந்தனர்.

வளைகாப்பு அழைப்பிதழ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

சத்யராஜ், மறைந்த கேபிஏசி லலிதா மற்றும் பாலாஜி ஆகியோரால் சூழப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக நடிகர் ஊர்வசி நடித்துள்ளார்.

அசல் படத்தில் ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜராஜ் ராவ் மற்றும் சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘வீட்ல விஷேசம்’ என்ற தலைப்பு 1994 இல் பாக்கியராஜ் இயக்கிய ‘வீட்ல விஷேசங்க’ திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டது.

‘வீட்ல விஷேஷம்’ ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.