இந்த தேதியில் வெளியாகும் ‘லைகரின்’ இரண்டாவது சிங்கிள்…!

லைகரின் தயாரிப்பாளர்கள் இரண்டாவது தனிப்பாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.

'வாட் லகா டெங்கே' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வெளியாகிறது.

இந்த அறிவிப்பு விஜய் தேவரகொண்டா மற்றும் ரம்யா கிருஷ்ணா இடம்பெறும் போஸ்டருடன் வெளியிடப்பட்டது

படத்தின் இயக்குனர் பூரி ஜெகநாத்

இப்படத்தில் ரோனித் ராய், அனன்யா பாண்டே, மைக் டைசன் மற்றும் மக்ரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலுக்கு 'அக்டி பக்கடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி ஜெகன்னாத்தின் பூரி கான்செட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.