இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளையொட்டி, 'மார்க் ஆண்டனி' படத்தின் தயாரிப்பாளர்கள் அவரின் கேரக்டர் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார்
அந்த போஸ்டரில் படத்தில் அவர் பெயர் சிரஞ்சீவி என்று தெரியவந்துள்ளது.
இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்
அவரைத் தவிர படத்தின் நடிகர்களில் எஸ்.ஜே.சூர்யா, சுனில் மற்றும் ரிது வர்மா ஆகியோரும் உள்ளனர்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்
சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் மற்றும் ரவிவர்மா ஆகியோர் அமைத்துள்ளனர்
“மார்க் ஆண்டனியைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, ஆனால் செல்வா சார் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்", என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறினார்