டிமான்டே காலனி 2’ - படப்பிடிப்பு தொடங்குகிறது
Nov 30, 2022
Mona Pachake
2015 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் த்ரில்லர் படமான ‘டிமான்டே காலனி’யின் இரண்டாம் பாகம் உருவாகும் என சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்
‘டிமான்டே காலனி 2’ படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்
முதல் பாகத்தைப் போலவே, படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார்
முதல் பாகத்தில் அருள்நிதி தமிழரசு, ரமேஷ் திலக், சனந்த், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இரண்டாம் பாகத்தில் அருள்நிதியும் நடிக்கவுள்ளார், மேலும் புதியதாக பிரியா பவானி சங்கரும் நடிக்கிறார்
சாம் சிஎஸ் இசையமைக்கிறார்