சித்தி இத்னானி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை சித்தி இத்னானி, இப்படத்திற்கான டப்பிங்கை முடித்துள்ளார்.

அவர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வர உள்ளது

இதில் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுத, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்

இதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.