பாடகர் கேகே கொல்கத்தாவில் காலமானார்
பிரபல பாடகர் கேகே மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்
குருதாஸ் கல்லூரியின் விழாவிற்காக நஸ்ருல் மஞ்சாவில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த போது அவர் இறந்தார்
கேகே பல தென்னிந்திய பாடல்களையும் பாடியுள்ளார்
தென்னிந்திய பிரபலங்கள் சிரஞ்சீவி, ராம் சரண், இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தமன் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் இருந்து கே.கே.க்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அவரும் ஹாரிஸ் ஜெயராஜும் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளனர்
மனம் உடைந்த ஹாரிஸ் தனது 'உயிரின் உயிரை' இழந்துவிட்டதாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.