லோகேஷ் கனகராஜின் 'தளபதி 67' தொடங்கியது…!

Feb 01, 2023

Mona Pachake

'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள விஜய்-லோகேஷ் கனகராஜ் படம் பற்றிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் இறுதியாக வந்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்களான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், இந்த படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி துவங்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜெகதீஷ் பழனிசாமியுடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரில் எஸ்.எஸ்.லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்

மீதமுள்ள நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.