‘திரும்பி பார்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் ‘திரும்பி பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது

இப்படத்தை இ இப்ராஹிம் இயக்கியுள்ளார்

இதை கிரி தனது பவி வித்யா லட்சுமி பேனரில் தயாரித்துள்ளார்

இப்படத்தில் வித்யா பிரதீப், ரிஷி ரித்விக், ராஜ்குமார், பிக்பாஸ் டேனியல், நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் சென்னை மற்றும் பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது

படத்திற்கு தேவ் குரு இசையமைக்கிறார்