'தலைவர் 170' - டிஜே ஞானவேல் இயக்குகிறார்

Mar 02, 2023

Mona Pachake

ஜெயிலர்' திரைப்படம் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் தனது அடுத்த படத்திற்காக கைகோர்க்க உள்ளார் சூப்பர்ஸ்டார்

இது தற்காலிகமாக 'தலைவர் 170' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

வரவிருக்கும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி 2024ல் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் ஞானவேல் இயக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது