இந்த தேதியில் மாமன்னன் டிரெய்லர் வெளியாகிறது

May 30, 2023

Mona Pachake

மாரி செல்வராஜின் 'மாமன்னன்' படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ஜூன் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'மாமன்னன்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார், நடனத்தை சாண்டி கையாளுகிறார்.

உதயநிதி முழு அரசியல் வாழ்வில் ஈடுபடும் முன் 'மாமன்னன்' தான் கடைசியாக நடிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது

'மாமன்னனுக்கு' தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, செல்வா படத்தொகுப்பைக் கையாளுகிறார்.