‘பீஸ்ட்’ ஹிந்தி டிரெய்லரை வருண் தவான் வெளியிடுகிறார்
இந்த படத்தின் ஹிந்தி டிரெய்லரை நடிகர் வருண் தவான் வெளியிட உள்ளதாக ‘பீஸ்ட்’ தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
அவர் டிரெய்லரை ஏப்ரல் 4, இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.
ஹிந்தியில் ‘ரா’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இந்தி டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகம் மூலம் வெளியிடப்பட்டது
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சனிக்கிழமை வெளியான தமிழ் ட்ரெய்லர், உடனடியாக வைரலாகி, இதுவரை 35 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது.
இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது