‘பெண்டுலம்’ - ஃபர்ஸ்ட் லுக்

Oct 24, 2022

Mona Pachake

‘பெண்டுலம்’ என்ற பெயரில் உருவாகி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் பி சதீஷ் குமரன் இயக்குகிறார்.

இப்படத்தை திரவியம் பாலா தனது சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் விஜித், கோமல் சர்மா, ஸ்ரீபதி, ஸ்ரீ குமார், டிஎஸ்கே, விஜித், எப்ஐஆர் ராம், ராம் ஜூனியர் எம்ஜிஆர், பிரேம் குமார், கஜராஜ் மற்றும் சாம்ஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, தலக்கோணம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் மற்றும் கோவாவைச் சுற்றியுள்ள இடங்களில் ‘பெண்டுலம்’ படமாக்கப்பட்டது.

இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்

படத்தின் வெளியீட்டு தேதியை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.