விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் மே 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது
இப்படம் ஏற்கனவே யு சான்றிதழுடன் அனுமதி பெற்றுள்ளது.
‘மாமனிதன்’ படத்தில் விஜய் சேதுபதி ராதாகிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவராக நடிக்கிறார், அவருக்கு மனைவியாக காயத்ரி நடிக்கிறார்.
குரு சோமசுந்தரனும் அனிகாவும் இந்தப் படத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’, இன்னும் வெளிவராத ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சீனு ராமசாமி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.