வீட்டின் முன்புறத்தில் சில செடிகள் மற்றும் மரங்கள் வைக்கக்கூடாது, ஏனெனில் அவை எதிர்மறை சக்தியை ஈர்த்து, வாழ்க்கையில் தடைகள் ஏற்படச் செய்யலாம். அவை எவை என்பது பற்றி இப்பதிவில் தெரிவிக்கப்படுகிறது.
காக்டஸ் போன்ற முட்கள் உள்ள செடிகள், வைக்க அழகாக தோன்றினாலும், வீட்டில் மன உழைச்சல் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
போன்சாய் செடிகள் அழகாக இருந்தாலும், அவற்றின் வளர்ச்சி தடையாக இருப்பது போன்ற தோற்றம் காரணமாக, குடும்ப வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம் என வாஸ்து கூறுகிறது.
காய்ந்து உயிரற்ற செடி வீட்டில் சோர்வான, வளர்ச்சி இழந்த சக்திகளை ஏற்படுத்தி, சூழலை இருண்டதாக மாற்றும். அதனால், பசுமை நிறைந்த புதிய செடிகளை மாற்றி வைப்பது நல்லது.
புளிய மரம் எதிர்மறை சக்தியுடன் தொடர்புடையதாகவும் மென்டல் ஸ்ட்ரெஸ் உண்டுபண்ணக் கூடியது எனவும் கூறப்படுகிறது. காட்டன் பிளான்ட் அதிகளவில் தேவையில்லாத செலவு வைக்கவும், ஆயுள் குறையவும் செய்யும் என கூறப்படுகிறது.
இது விஷத்தன்மையுடைய பாலை தன்னுள் கொண்டுள்ளது. குடும்பத்தில் சண்டை சச்சரவு மற்றும் குழப்பத்தை உண்டாக்க வல்லது. எனவே வீட்டருகே இதை வளர்ப்பதை தவிர்ப்பது நலம்.
மா, சப்போட்டா போன்ற பழமரங்கள் வீட்டின் முன்புறம் இருந்தால், அதன் இலை, பூ, பழங்கள் வீடுபார்வைக்கு குப்பைப் போல தோன்றி, குடும்ப வளர்ச்சியும் நிம்மதியும் பாதிக்கப்படும் என வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்