வீட்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை ரசாயனங்கள் இல்லாமல் சுத்தம் செய்ய தேங்காய் சிரட்டை ஒரு எளிய மற்றும் மலிவான வழி.
தேங்காய் ஓடு அல்லது சிரட்டை (கொட்டாங்குச்சி) சாம்பலாக்கி அதிலிருந்து ஒரு சக்திவாய்ந்த கிளீனிங் கரைசல் தயாரிக்கலாம்.
தேங்காய் சிரட்டையை நெருப்பில் எரித்து சாம்பலாக்கி, அதை நைசாக பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.
சாம்பலுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டாமல் ஒரு வாட்டர் பாட்டிலில் ஊற்றி, அரை டீஸ்பூன் விம் லிக்யூட் சேர்க்கவும்.
ஒரு டம்பளரில் 2 டீஸ்பூ உப்பு + கால் டம்பளர் அளவு வினிகர் சேர்த்து நன்றாக கலக்கி, இதையும் கரைசலில் சேர்க்கவும்.
பாட்டிலின் மூடியை ஓட்டையுடன் போட்டு நன்றாக குலுக்கி வைத்தால் இயற்கை கிளீனிங் லிக்யூட் தயாராகும்.
இந்த கரைசலைப் பயன்படுத்தி பாத்திரங்கள் பளபளப்பாகவும், டாய்லெட் & பாத்ரூம் சுத்தமாகவும் செய்யலாம். இது விம் லிக்யூட்டின் நீட்டிப்பை அதிகரிக்கும்.
கெமிக்கல் கிளீனிங் லிக்யூட் அல்லது ஆசிட் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான இயற்கை மாற்று வழி.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்