உங்கள் சமையலறையில் திடீரென கேஸ் போன்ற வாசனை தெரிந்தால் அதை சிறிதும் கவனிக்காமல் விட வேண்டாம். அது கேஸ் லீக்காக இருக்கக்கூடும் என்பதால் உடனே சரிபார்க்க வேண்டும்.
வாசனை வந்தவுடன் உடனே ஸ்டவ் குமிழ்களை (knobs) மூடவும் மற்றும் சிலிண்டர் ரெகுலேட்டரை அணைத்து விடவும். இது கேஸ் வெளியேறுவதைத் தடுக்க உதவும்.
அந்த நேரத்தில் லைட் ஸ்விட்ச், மொபைல் போன், அல்லது ப்ளக் பாயிண்ட் போன்றவற்றை இயக்க வேண்டாம். சிறிய ஸ்பார்க் கூட வெடிப்பு ஏற்படுத்தக்கூடும்.
சமையலறை மற்றும் அருகிலுள்ள அறைகளின் ஜன்னல்கள், கதவுகளைத் திறந்து காற்றோட்டத்தை ஏற்படுத்தவும். இது கேஸ் மணம் வெளியேற உதவும்.
சிலிண்டரில் இருந்து எங்கேனும் கேஸ் வெளியேறுகிறதா என அறிய அந்த இடத்தில் இரண்டு சொட்டு தண்ணீர் ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றிய இடத்தில் குமிழிகள் (bubbles) வந்தால், அங்கு கேஸ் லீக் ஆகி வருகிறது என்பதற்கான உறுதியான அறிகுறி. உடனடியாக அதைப் பயன்படுத்துவது நிறுத்தவும்.
கேஸ் லீக் இருப்பதை உறுதிப்படுத்தியவுடன் உங்கள் கேஸ் ஏஜென்சி அல்லது ஹெல்ப்லைன் நம்பரை உடனே தொடர்பு கொள்ளவும். அவர்கள் நிபுணரை அனுப்பி சீரமைத்துத் தருவார்கள்.
சிலிண்டர் லீக் ஏற்பட்டால் அச்சப்படாமல், மேற்கண்ட படிகளை அமைதியாக பின்பற்றுவது முக்கியம். இது பெரிய விபத்தைத் தடுக்க உதவும்.