பிடிச்சவங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையில இத மட்டும் அனுப்புங்க

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

அன்பென்னும் பண்புகளை ஆணித்தரமாய் சொல்லிவிட ஆயுளையே அவர் கொடுத்தார் அகிலத்தின் விடுதலைக்காய் அவர் பிறந்த நாளின்று அறியாமை போக்கிடுவோம் பகைமையை அறுத்தெறிந்து பாசமோடு வாழ்ந்திடுவோம்! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள் தகர்த்துவிட விடியலென வந்த்துவிட்டார் விண்ணுலக தேவன் இயேசு கிறிஸ்து.. இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றி பாடி கொண்டாடுவோம் ஆர்ப்பரித்து அகமகிழ்வோம் இந்த கிறிஸ்துமஸ் நாளிலே...! கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவார். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

அன்று ஆயர்கள் கேட்ட ஆச்சர்ய நற்செய்தியை இன்று நாமும் கேட்போமா.. இயேசு நமக்காய் பிறந்தாரென...! கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!